நண்பனின் காய்ச்சலிலே …

by karthikselvakumar


உடல்நலமற்ற தோழன்
உச்சக்களிப்பில் நான்

ஓய்வின்றி நடமாடிய நீ
இன்று நோய்வுற்று மடி சாய்ந்ததால் !

தாலாட்ட இங்கு தாய் இல்லை – இருந்தும்
கவலை உன் கண்ணில் துளி இல்லை
இன்னும் உயிரோடு நான் இருப்பதாலோ !

உயிருள்ளவரை என்னை நினைப்பாயோ !
குணமானபின் நொடியில் மறப்பாயோ !

எதிர்பார்ப்புகள் இன்றி சேவை செய்கிறேன்
என்றென்றும் காத்து கிடக்கிறேன்
மறுமுறை மடிசாயும் தருணத்தை ஏங்கி !

– கார்த்திக் செல்வகுமார்

Advertisements