தவறி தவிக்கிறேன் !

by karthikselvakumar


மொழிகளின்றி பேசிகொல்கிறோம்
மூன்று வருடங்களாய்

வழிகள் அத்தனையும்
சலிக்காமல் வந்தேன்
தவறியாவது ஒரு முறை
பார்ப்பாயா என்று

விசித்திரமாய் சந்தித்தோம்
அன்று இடித்தாய்
அணுவும் வலி இல்லை
உணரவும் மனமில்லை
எதுவும் செய்யாமல்
இன்று தெரிகிறது
என்னில் இரண்டும்

உன்னை கண்ணில் கண்டது
ஒரு சில முறை தான்
ஆனால் கனவில் தெரிகிறாய்
பல கோடி பிம்பங்களாய்

நீ பேசும் மொழி வேறாயினும்
நாம் படிக்கும் கல்வி ஒன்றானதே

கைக்கு கிட்டாதே பொருளுக்கே
மதிப்பும் அழகும் அதிகம்
நிலா நச்சத்திரம் மற்றும் நீ

ஆதலால் நீ என்றும் கிடைக்காமல்
இருக்க வேண்டி கொள்கிறேன்
தொலைவில் இருந்தே ரசித்து செல்கிறேன்

-கார்த்திக் செல்வகுமார்

Advertisements