இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

by karthikselvakumar


நாளை பிறக்கும் உறவே
உலகில் மலரும் நிலவே

கணினியில் கைதேர்ந்த
கயவனே

கண்ணிமையால் கன்னிகளாய்
கவர்பவனே

உன் இதழ் திறந்தால்
தெறிக்கும் வரிகள்

உன் கை மலர்ந்தால்
சிரிக்கும் உயிர்கள்

உன் கண் சிமிந்தால்
மடியும் மலர்கள்

உன் தலை நிமிர்ந்தால்
களிக்கும் உறவுகள்

உன் கை அசைந்தால்
நடுங்கும் படைகள்

உன் கால் நகர்ந்தால்
தொடரும் வெற்றிகள்

பூட்டிய புதையலாய்
நான் இருக்க

திறவுகோளாய் என்
வாழ்வை திறந்தாயே

இவ்வனைத்தும் நேர்ந்தது
உன் பிறப்பாலே – இதனால்

உயிர் நண்பனாய்
தீவிர ரசிகனாய்

உன் பிறப்பை
வரமாய் கருதி

வாழ்வில் சிறக்க
வாழ்த்துகிறேன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!

dedicated
to my friends ( I gawthaman and Elanchezhian )

Advertisements