காதல வலிகள்

by karthikselvakumarஆயிரத்தில் ஒருவனாய்
உன் கண்கலெண்ணை பார்க்க

ஆயிரமுறை ஒருவனாய்
உன் கண்களையே பார்த்தேன்

அணைந்த விளக்காய்
நான் கீழ் இருக்க

ஏன் நீ மேல் நோக்கி
எறிகிறாய் நெருப்பாய்

ஒரு துளி தயிர்
பசுமபாலையே திரைக்கும்

பல கோடி உயிர்
பெண்பாலை கரைக்காதோ

மனிதர்களிடம் உரையாட தமிழ்
கணினியிடம் உரையாட ஜாவா

எம்மொழியும் உதவாது
உன்னிடம் உறவாட – இது

நாவால் உளறும் மொழியல்ல
மனதால் உணரும் வலிகள்

மரணம் ஒரு கணம் வரலாம்
தினம் தினம் எரிவது தகுமோ

உன் உறவே கணவாய் அழிய
உயிரை கனவிடம் அளித்து

உலகில் பிணமாய் அழைந்தேன் !!!

கார்த்திக் செல்வகுமார்

Advertisements